சென்னை: சென்னையில் போலி ஆவணங்களைத் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்ற வடசென்னை பாஜக கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சாமுண்டீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நகல் எடுக்கும் கடைக்கு வருவோரின் பத்திரப்பதிவு ஆவணங்களை நகல் எடுத்து அதில் உள்ள பெயரை மாற்றி இருக்கிறார். அதன்மூலம் மின் இணைப்பு, சொத்து வரி என பெயர் மாற்றம் செய்து சொத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளார்.
வாடகைக்கு இருந்த இடத்தை தனது சொத்தாக மாற்ற போலி ஆவணங்களைத் தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவலர்கள் அவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.