தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

1 mins read
3beb865a-50cb-4dd4-be43-187fa262623c
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் நோய் குறித்து எச்சரிக்கை விடுத்த சசி தரூர். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்னீரில் குளிப்பதை, நீந்துவதைத் தவிர்க்கும்படி அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நன்னீர் என்பது உப்பு மற்றும் பிற தின்மப் பொருள்கள் மிகக் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும்.

“கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா கிருமி பாதிப்பு குறித்த செய்தி மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன் மூலம் பலர் இந்தக் கொடிய கிருமியால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு வேறு ஏதாவது தீர்வு கிடைக்கும் வரை நீச்சல் குளங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

“சில நீர் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருந்தபோதிலும் சுத்திகரிக்கப்படாத இயற்கை நீர்நிலைகளில் அச்சுறுத்தல் உள்ளது. அங்கே அமீபா பாதிப்பு இருப்பதாகக் கருதுகிறேன். கடல்நீர், மென்னீர் நல்லது.

“உங்கள் வீட்டுத் தண்ணீர் பாதுகாப்பானது. குளோரின் சேர்க்கப்பட்ட நீச்சல் குளத்தின் நீர் நல்லது. நன்னீரில் குளிப்பது பாதுகாப்பானது அல்ல,” என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் 69 பேர் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் இறந்தனர். செப்டம்பர் 12ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 52 பேர் மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்