தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு: பாகிஸ்தான்

1 mins read
b1ec6102-6911-45ed-83ab-b29865c2b1ab
இந்தியா விமானங்களுக்கான தடையைப் பாகிஸ்தான் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நீட்டித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

லாகூர்: இந்திய விமானங்களுக்கான தடையை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை பாகிஸ்தானின் ஆகாயவெளியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்தது.

ராணுவ விமானங்கள், சிவில் விமானங்கள் என இந்தியாவால் செயல்படுத்தப்படும் எந்த விமானமும் பாகிஸ்தான் ஆகாயவெளி வழியாகக் கடந்துசெல்ல முடியாது என்று விமானிகளுக்கு விடுக்கப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இந்திய நேரப்படி அந்தத் தடை ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 5.19 மணி வரை நடப்பில் இருக்கும் என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் சொன்னது.

பாகிஸ்தானின் அனைத்து விமானங்களும் இந்திய ஆகாயவெளி வழியாக இம்மாதம் 24ஆம் தேதி வரை கடந்துசெல்ல தடை உள்ளது.

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றுள் ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானங்களுக்கான தடையும் அடங்கும்.

இந்திய விமானங்களுக்கான தடையைப் பாகிஸ்தான் ஏப்ரல் 24ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்று மற்றதன்மீது விதித்த கட்டுபாடுகளைப் பல முறை நீட்டித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்