தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் அணியிடம் விளையாட்டுப் பொருட்கள் திருட்டு

1 mins read
4f2380da-a271-4db6-8c39-4147c55343cf
படம்: டேவிட் வார்னர்/டுவிட்டர் -

இந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட்டளர்களின் மட்டைகள், கையுறைகள், காலணிகள் போன்ற விளையாட்டு தொடர்பான பொருட்ள்கள் திருடப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் துடிப்பான நடவடிக்கையால் காணாமல் போன பொருட்ள்களில் பெரும்பாலானவை மீட்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 16 மட்டைகள் திருடப்பட்டிருந்தன, முன்னணி வீரர் டேவிட் வார்னரின் விலை உயர்ந்த மட்டைகளும் அதில் அடங்கும்.

கிரிக்கெட் மட்டை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் கூறினர்.

பெங்களூருவில் விளையாடிவிட்டு டெல்லிக்கு திரும்பும் போது திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் துரித நடவடிக்கைக்கு சமூக ஊடகம் வழி வார்னர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இருப்பினும் சில பொருட்ள்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

விளையாட்டளர்களின் பொருள்கள் காணாமல் போனது அதிர்ச்சி தருவதாகவும், இதுபோன்று நடப்பது இதுவே முதல்முறை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்