தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரு விபத்து: கட்டட உரிமையாளரின் மகன் கைது!

1 mins read
3c46a164-8b59-4617-950b-ee264e13d5bf
கட்டட விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். - படம்: ஊடகம்

பெங்களூர்: பெங்களூரில் கட்டுமானப் பணியில் இருந்த 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன மழையால் ஹென்னூர், பாபுசாபாளையா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் முனிராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்