பெங்களூரு: கொலையாளி குறித்த தகவல் கிடைத்துள்ளது

பெங்களூரு: கொலையாளி குறித்த தகவல் கிடைத்துள்ளது

1 mins read
5153187c-9781-456b-8de2-ef1cbf7f578a
29 வயது மகாலட்சுமி. - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் 29 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குற்றவாளியைத் தனிப்படைக் காவல்துறை அதிகாரிகள் நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வயாலிக்காவல் பகுதியை சேர்ந்தவர் 29 வயது மகாலட்சுமி. கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார் மகாலட்சுமியின் சகோதரருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அந்த வீட்டை குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் திறந்து பார்த்தபோது, குளிர்சாதன பெட்டியில் மகாலட்சுமியின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு தனித்தனி பையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அதன்பின்னர் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதனைக் உடற்கூறாய்விற்கு அனுப்பினர்.

‘‘மகாலட்சுமியின் கைப்பேசியில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சிசிடிவி காணொளிகளை ஆய்வு செய்ததில் கொலையாளி பற்றிய தகவல் கிடைத்துள்ளது. மேலும், பெண்ணின் கணவர், அவரது ஆண் நண்பர்கள் சிலரை விசாரித்துள்ளோம். சந்தேகத்துக்குரிய இருவரைத் தேடும் பணி நடந்து வருகிறது. ஏறக்குறைய குற்றவாளியை நெருங்கிவிட்டோம்,” என்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்