தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேட்பாளர் இறந்ததால் தேர்தல் ஒத்திவைப்பு

1 mins read
23be5128-aab8-411f-b9a4-c82af67e44bd
மாரடைப்பால் உயிரிழந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பலாவி, 49. - படம்: இந்திய ஊடகம்

போபால்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால் அவர் போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், பேட்டுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக அசோக் பலாவி, 49, என்பவர் நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) மாரடைப்பால் அசோக் பலாவி திடீரென உயிரிழந்தார்.

இதனையடுத்து, பேட்டுல் தொகுதிக்கான வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து மே 7ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

இம்மாதம் 19ஆம் தேதிக்குள் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்