தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சிறுவன்; பிறப்புறுப்பை வெட்டி வீசிய கொடூரம்

1 mins read
78ac559a-a22c-43b6-8198-c54e8fd5d2ed
மாதிரிப்படம்: - பிக்சாபே

பாட்னா: எட்டாம் வகுப்பு மாணவனைக் கொன்று, அவனது பிறப்புறுப்பை வெட்டி வீசிய கொடூரம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பெகுசராய் மாவட்டம், காசிம்பூர் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் நந்து ரஜாக். அவருடைய மகனான 14 வயது சிவம் குமாரைக் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) மாலையிலிருந்து காணவில்லை. அண்டைவீட்டாரான அவ்னீத் குமார் என்பவருடன் சேர்ந்து, தம் ஊரில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்குச் சென்ற சிவம், அதன்பின் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

தனையடுத்து, சிவத்தின் குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால், மறுநாள் புதன்கிழமை அவ்வூரைச் சேர்ந்த சுரேந்திர பாஸ்வான், அவருடைய உறவினர் அவ்னீத் குமார் இருவர் மீதும் சிவத்தின் தந்தை காவல்துறையில் புகாரளித்தார்.

அதற்கு மறுநாள் வியாழக்கிழமை, தம்முடைய வீட்டின் பின்னால் இருக்கும் பழத்தோட்டத்தில் சிவத்தின் உடல் காணப்பட்டது.

“சிவத்தின் கழுத்து கயிற்றால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அவருடைய பிறப்புறப்பும் துண்டாடப்பட்டிருந்தது. சுரேந்திராவையும் அவ்னீத்தையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது,” என்று காவல்துறை உயரதிகாரி சுபோத் குமார் கூறினார்.

அண்டை வீடுகளில் வசிக்கும் சிவத்தின் குடும்பத்திற்கும் சுரேந்திராவின் குடும்பத்திற்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிவத்தின் கழுத்தைச் சுற்றியிருந்த கயிறு தடயவியல் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று திரு சுபோத் குமார் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்