பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது.
243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 7 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 100 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் ஏறத்தாழ 14,000 பேர் வாக்காளர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 85 வயதைத் தாண்டிய வாக்காளர்கள் எண்ணிக்கை 4.03 லட்சமாக உள்ளது.
சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு முன் கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி பீகாரில் 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 16.07 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.