பீகார் தேர்தல்: பிரசாரம் நிறைவு, நவம்பர் 11ல் வாக்குப்பதிவு

2 mins read
e222e496-f9b9-4318-9781-7030a26cbd49
பதற்​றமான சூழல் நிலவக்கூடிய வாக்குச்​சாவடிகளில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

பாட்னா: பீகாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 தொகு​தி​களில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) சட்டமன்றத் தேர்​தல் நடைபெறுகிறது. இந்தத் தொகு​தி​களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்​தது.

பீகாரில் மொத்​தம் 243 சட்​டமன்றத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு இரண்டு கட்டங்​களாகச் சட்​டமன்றத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. அதன்​படி நவம்பர் மாதம் 6ஆம் தேதி 121 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் ஏறத்தாழ 65 விழுக்காடு வாக்​கு​கள் பதி​வாகின.

இரண்​டாம் கட்​ட​மாக நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று 122 தொகு​தி​களில் தேர்​தல் நடைபெறுகிறது. இந்தத் தொகு​தி​களில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) 5 மணி​யுடன் பிர​சா​ரம் நிறைவுபெற்றது.

நிறைவு நாளில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் முதல்​வர் நிதிஷ் குமார், மத்​திய அமைச்​சர்​கள் அமித்ஷா, ராஜ்​நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்ய நாத் உள்​ளிட்​டோர் தீவிர வாக்​கு சேகரிப்​பில் ஈடு​பட்​டனர். பெருங்கூட்​டணி சார்​பில் ஆர்​ஜேடி மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் வாக்கு சேகரித்​தனர்.

இரண்​டாம் கட்டத் தேர்​தலில் 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர்.

“20 மாவட்​டங்​களைச் சேர்ந்த 122 சட்​டமன்றத் தொகு​தி​களில் நவம்பர் 11ஆம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இந்தத் தொகு​தி​களில் 3.7 கோடி வாக்​காளர்​கள் உள்​ளனர். இதில் 1.95 கோடி பேர் ஆண்​கள், 1.74 கோடி பேர் பெண்​கள். மூன்​றாம் பாலினத்​தவர்​ 943 பேர் உள்​ளனர்.

“45,399 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்டு பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டுள்​ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்​குப்​ப​திவு நடை​பெறும். பதற்​றமான சூழல் நிலவும் வாக்குச்​சாவடிகளில் மட்​டும் மாலை 4 மணிக்கே வாக்​குப்​ப​திவு நிறைவடை​யும். இந்த வாக்​குச் சாவடிகளில் துப்​பாக்கி ஏந்​திய துணை ராணுவ வீரர்​கள் பாது​காப்புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக நேப்பாள எல்லை மூடப்​பட்டுள்​ளது,” என்று வாக்​குப்​ப​திவு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்