பீகாரில் 2ஆம் கட்டத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப் பதிவு

2 mins read
7ad1bdfe-597f-481d-855f-fcea89bfbe1e
கடந்த வாரம் முதற்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்களை முறையாக ஒப்படைத்த தேர்தல் அலுவலர்கள். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்தனர்.

பீகாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ள நிலையில், இரண்டு கட்​டங்​களாக சட்​டசபைத் தேர்​தல் நடைபெறும் என தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

அதன்​படி கடந்த 6ஆம் தேதி 121 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 65.08 விழுக்காடு வாக்​கு​கள் பதி​வாகின.

மீதமுள்ள 122 தொகு​தி​களில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

காலை 9 மணி நிலவரப்படி 14.55 விழுக்காட்டு வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 31. 38 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின.

காலையில் இருந்தே வாக்குப்பதிவைச் செலுத்த மக்கள் ஆர்வமுடன் வந்துகொண்டே இருக்கின்றனர்.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47. 62 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

20 மாவட்டங்களில் அடங்கியுள்ள 122 தொகுதிகளில், 136 பெண்​கள் உட்பட மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1 கோடியே 95 லட்சம் ஆண் வாக்காளர்களும் 1 கோடியே 74 லட்சம் பெண்​ வாக்காளர்களும் 943 மூன்​றாம் பாலினத்​தவர்​களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 1,302 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். இந்த தொகு​தி​களில் 3 கோடியே 70 லட்சம் வாக்​காளர்​கள் உள்​ளனர். இதில் 1 கோடியே 95 லட்சம் ஆண், 1 கோடியே 74 லட்சம் பேர் பெண்​ வாக்காளர்களும், மூன்​றாம் பாலினத்​தவர்​கள் 943 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்காக 45,399 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்டு பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டன. வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிவரை நடை​பெற்றது.

பதற்​ற​மான வாக்குச்​சாவடிகள் என அடையாளம் காணப்பட்டவற்றில் மட்​டும் மாலை 4 மணிக்கே வாக்​குப்​ப​திவு நிறைவடைந்தது.

இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடக்கிறது. ஆட்சியைப் பிடிப்பது எந்தக் கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.

சாதனை படைக்க மோடி அழைப்பு

இந்த நிலையில் பிரதமர் மோடி தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பீகார் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வாக்களிப்பு சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள், தாங்களாகவே வாக்களிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்