பாஜக போலி வாக்காளர்களைச் சேர்க்கிறது: ஆம் ஆத்மி புகார்

1 mins read
b680c4e9-78d7-4fb6-a423-e3d5741219a2
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பாஜக தனது தலைவர்களின் வீட்டு முகவரிகளைப் பயன்படுத்தி போலி வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு அதிகளவில் விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சி டெல்லி தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சி செய்கிறது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், புதுடெல்லி பாஜக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரமேஸ் வெர்மா, எம்.பி. பதவியில் இல்லாதபோதும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாளிகையைக் காலி செய்யாமல் அங்கே தங்கி வருகிறார். மேலும் அந்த மாளிகையின் முகவரியில் இருந்து 33 புதிய வாக்காளர்களின் பெயர்களை இணைக்க விண்ணப்பித்துள்ளார்.

இரண்டாவதாக, மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, அவரது வீட்டு முகவரியின் பெயரில் புதிதாக 26 வாக்காளர்களின் பெயர்களை இணைக்க விண்ணப்பித்துள்ளார். மத்திய இணையமைச்சர் கமலேஷ் பஸ்வான், அவரது வீட்டு முகவரியில் இருந்து 26 வாக்காளர்களின் பெயர்களை இணைக்க விண்ணப்பித்துள்ளார்.

“புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்தின் கண்ணை மறைத்து நடத்தும் நாட்டின் மிகப் பெரிய தேர்தல் முறைகேடு இது. உண்மையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்தும் தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்,” என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்