பெங்களூரு: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ ஒருவர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என பாஜக கூறி வந்தது.
ஆனால், பாஜக எம்எல்ஏவான எஸ்.டி. சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து அதிர்ச்சி அளித்தார். இதனை பாஜக தலைமை கொறடா தொட்டண்ண கௌடாவும் உறுதிப்படுத்தினார்.
கட்சி மாறி வாக்களித்த சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் தலைவர்களுடன் சோமசேகர் நெருக்கம் காட்டி வருவதாகச் செய்திகள் வெளியாயின. அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

