கேரளாவில் மீண்டும் கணக்கைத் தொடங்கிய பாஜக

கேரளாவில் மீண்டும் கணக்கைத் தொடங்கிய பாஜக

படம்: ராய்ட்டர்ஸ்

04 May 2026 - 9:07 pm

1 mins read

திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பாஜக தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கி உள்ளது.

இதற்கு முன்னர் 2016 சட்டசபைத் தேர்தலில் நிமோம் தொகுதியில் பாஜக சார்பில் ஓ. ராஜகோபால் வெற்றி பெற்றார். இவர்தான் கேரளா வரலாற்றில் முதல் பாஜக எம்எல்ஏ ஆவார். அதன்பிறகு 2021 சட்டசபைத் தேர்தலில் கேரளாவில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கொல்லம் மாவட்டம் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் பாஜகவின் பிபி கோபகுமார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரஜ் ரவி இந்த தொகுதியில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதுதவிர நிமோம் தொகுதியில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் உள்ளார்.

கேரளாவை எடுத்து கொண்டால் பாஜகவுக்கு செல்வாக்கு என்பது கிடையாது. 2024 மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்ற சுரேஷ்கோபி மத்திய இணை அமைச்சராக உள்ளார். 2025 டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றது.

அத்துடன், கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையான திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்