தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்

1 mins read
1b6473c0-2e00-4dcc-80cf-2887488d2477
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி அரசின் நலத்திட்டங்களைப் பாதுகாக்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியின் தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் பாதுகாக்கப்பட்டு தொடர, இம்முறை ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என பாஜக ஆதரவாளர்களிடம் சனிக்கிழமை (பிப்ரவரி1) கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்