புதுடெல்லி: அதிக நன்கொடை பெற்ற கட்சிகளின் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளதாக மக்களாட்சி சீர்திருத்தங்கள் சங்கம், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த வரிசையில், காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2023-24ஆம் ஆண்டில், அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் அறக்கட்டளைகள் அதிக தொகையை நன்கொடையாக வழங்கி இருந்தாலும் உள்கட்டமைப்பு, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் பெரிய அளவில் நன்கொடை அளித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்நிறுவனங்கள் மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணைகளை எதிர்கொள்கின்றன என்றும் அவற்றில் நான்கு நிறுவனங்கள் பாஜகவுக்கு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன.
ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று காங்கிரஸ் கட்சிக்கு நிதி கொடுத்துள்ளது.

