தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மகாராஷ்டிர பாணி

2 mins read
e5f6e500-2110-4cfd-9480-9ffd09f9646d
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடி​யு கட்சிக்குச் சமமான தொகு​தி​களைப் பிரித்து அளித்​துள்​ளது பாஜக (தலா 101 தொகு​தி​கள்). எனினும், ஜேடி​யு​, பாஜகவைவிடக் குறைந்த எண்​ணிக்​கை​யில் வெற்றி பெற்​றால், மகா​ராஷ்டிரா உத்​தியை பாஜக கையில் எடுக்​கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி, மகாராஷ்டிராவில் பின்பற்றிய அதே பாணியை அமலாக்கத் திட்டமிட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது, மத்​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்டணி​யின்​ (என்​டிஏ) வெற்​றிக்கு வழி வகுக்​கும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

மகா​ராஷ்டி​ரா​வில், இரண்​டாகப் பிரிந்த சிவசே​னா​வில் ஏக்​நாத் ஷிண்​டே​வின் பிரிவு பாஜக​வுடன் இணைந்து ஆட்சி அமைத்​தது. இதன் முதல்​வ​ராக ஏக்​நாத் ஷிண்​டேவை அமர அனு​ம​தித்​தது பாஜக. ஈராண்டு ஐந்து மாதங்​களுக்கு முதல்​வராக இருந்தார் ஏக்​நாத் ஷிண்​டே.

2024ல் நடந்த மகா​ராஷ்டிரா சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மாபெரும் வெற்றி பெற்​றது பாஜக கூட்​ட​ணி. வெற்​றிக்குப் பிறகு தனது போக்கை மாற்​றிய பாஜக, தேவேந்​திர பட்​னா​விஸை முதல்​வ​ராக நியமித்​தது.

தேர்​தலைச் சந்​திக்க முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்​பட்ட ஷிண்​டே, துணை முதல்​வ​ராகப் பதவி இறக்​கம் செய்​யப்​பட்​டார்.

பிளவுபட்ட மற்​றொரு கட்​சி​யும் தமது கூட்​ட​ணி​யின் தலை​வரு​மான தேசி​ய​வாத காங்​கிரசின் அஜித் பவார் துணை முதல்​வ​ராக நியமிக்​கப்​பட்​டார்.

இந்த உத்தியையே பாஜக பீகார் மாநிலத்திலும் பயன்​படுத்​தும் என்ற கருத்து எழுந்​துள்​ளது.

பீகாரில் ஐக்​கிய ஜனதா தளம் ​(ஜேடி​யு) தலை​வ​ரான முதல்​வர் நிதிஷ் குமார், ஒரு வலு​வான தலை​வ​ராக உள்​ளார். ஆனால், வயது மூப்​பின் காரண​மாக நிதிஷ்கு​மார் உடல்​நிலை பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கருதப்​படு​கிறது.

இருப்​பினும், ஜேடி​யுவுக்கு சமமான தொகு​தி​களைப் பிரித்து அளித்​துள்​ளது பாஜக (தலா 101 தொகு​தி​கள்). எனினும், ஜேடி​யு​வின் வேட்​பாளர்​கள், பாஜகவை விடக் குறைந்த எண்​ணிக்​கை​யில் வெற்றி பெற்​றால், மகா​ராஷ்டிரா உத்​தியை பாஜக கையில் எடுக்​கும் என்று கூறப்படுவதாக இந்து தமிழ்த் திசை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்