தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கறுப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்: இந்திய அரசு

1 mins read
ad593387-4a1c-40f7-b4ab-e930ef9e1ae5
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளதாக முன்பு தகவல் வெளியானது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டியானது, விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேய ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார்.

“கறுப்புப் பெட்டி தரவுகளை மீட்பது தொழில்நுட்ப ரீதியான நடைமுறை. விமான விபத்து விசாரணை முகவை ஆய்வு, விசாரணை நடத்தி முடித்த பிறகு, விபத்திற்கான காரணம் தெரியவரும்,” என்றார் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான ராம்மோகன் நாயுடு.

முன்னதாக, ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டியின் வெளிப்புறம் மிக மோசமாக சேதமடைந்திருப்பதால் அதில் உள்ள தரவுகளை இந்திய நிபுணர்களால் மீட்க முடியவில்லை என்றும் அதனால் அக்கறுப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

குறிப்புச் சொற்கள்