புதுடெல்லி: டெல்லியில் நிகழ்ந்த தாக்குதலில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி (ஜெஇஐ) தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்களும் பாதுகாப்புப் படையினரும் சோதனை நடத்தினர்.
இதுபோல சோபூர் மாவட்டத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மாவட்ட காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சோதனை நடைபெற்ற இரு மாவட்டங்களிலும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுவரை சுமார் 500 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

