தமிழக எதிர்க்கட்சித் தலைவருக்கு கேரளாவில் வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
d9b2d159-c2af-4f49-ac03-ec3eda99d076
 காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.  - படம்: ஊடகம்

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு வருவாய்த்துறை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாக பதற்றம் நிலவியது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை தாக்கும் நோக்கத்துடன் வெடிகுண்டு வைத்துள்ளதாக ராணா தஹாவூர் என்ற பெயரைக் குறிப்பிட்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தால் வருவாய்த்துறை அலுவலக ஊழியர்கள் பதற்றமடைந்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு செம்பை நினைவு இசைக் கல்லுாரி அருகே, இந்த மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் உள்ளது. புதன்கிழமை காலை வந்த மின்னஞ்சலில், அந்த அலுவலகத்தில் ஆர்டிஎக்ஸ் வகை வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் மதியம் 1.30 மணியளவில் அதுவெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் அடங்கிய தனிப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

மிரட்டல் மின்னஞ்சலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தை காவல்துறை உறுதி செய்தது.

குறிப்புச் சொற்கள்