புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) குறைந்தது மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளில் குறைந்தது ஒன்றிலாவது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவேண்டாம் என்று பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்களும் தீயணைப்புப் படையினரும் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இதுவரை சந்தேகப்படும்படி எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டதாக இந்துஸ்டான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது.
கடந்த ஜூலை மாதம் 45 பள்ளிகளுக்கும் மூன்று கல்லூரிகளுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்டது. அதேபோல், சென்ற ஆண்டு மே மாதம் டெல்லி வட்டாரத்தில் உள்ள 300 பள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாக மின்னஞ்சல்வழி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுவும் போலி மிரட்டல் என்பது தெரியவந்தது.