சென்னை: மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
இதனால் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை மாநகரக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.