தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதியில் மூன்று ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
25da7f69-a4f2-4bfc-b20e-b65065f79d42
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி மாவட்டம். - படம்: Nikhilb239 / விக்கிபீடியா

திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் இருக்கும் மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலைக் கொண்ட மின்னஞ்சல்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 24) அனுப்பப்பட்டதாக சில ஊடகங்களும் தெரிவித்தன. அவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அனுப்பப்பட்டன என்று வேறு சில ஊடகங்களும் தகவல் வெளியிட்டன.

அந்த மின்னஞ்சல் தலைப்பில் ‘இதில் தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தொடர்புள்ளது’ என்ற பொருளைக் கொண்ட ஆங்கில வார்த்தைகள் இருந்ததாகவும் ‘இந்தியா டுடே’ போன்ற ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் விவகாரத்தில் ஜாஃபர் சாதிக் கைதுசெய்யப்பட்டதற்குப் பதிலடியாக வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் அந்த மின்னஞ்சல்களில் கூறப்பட்டது.

லீலா மஹால், கப்பிலா தீர்த்தம், அலிப்பிரி (Leela Mahal, Kapila Theertham, Alipiri) ஆகிய இடங்களில் உள்ள மூன்று தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் காவல்துறையினர் மோப்ப நாய்களைக் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்