இந்தியாவில் விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டார்.
சம்பவம் ஜூன் 7ஆம் தேதி புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் நடந்தது.
மாலை 4:55 மணிக்கு டெல்லியில் இருந்து மும்பை செல்லும் UK-941விஸ்தாரா விமானத்தில் இந்தியாவில் இருந்து துபாய் செல்லவிருந்த ஆடவர் ஒருவர் கைப்பேசி உரையாடலின் போது வெடிகுண்டு தொடர்பாகப் பேசியுள்ளார்.
ஆடவரின் உரையாடலைக் கேட்ட பெண் பயணி ஒருவர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தம்மிடம் இருந்த தேங்காயை சோதனை அதிகாரிகள் எடுத்துக்கொண்டதாகவும் தேங்காயை வெடிகுண்டு போல் அதிகாரிகள் பார்க்கிறார்கள் என்றும் அவர் தாயிடம் பேசியதாகக் கூறினார்.
அதன் பின்னர் விமானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது, அதில் வெடிகுண்டு தொடர்பாக எந்த பொருளும் இல்லை.
இந்த பரபரப்பால் விமானப் பயணம் இரண்டு மணி நேரம் தாமதமானது.
புகார் கொடுத்த பெண் அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள மறுத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சந்தேக நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்