பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: பங்ளாதேஷ் பிரதமருக்கு மோடி அழைப்பு

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: பங்ளாதேஷ் பிரதமருக்கு மோடி அழைப்பு

1 mins read
f468ddea-4b03-4333-b4b8-cd652a4e3f8e
பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகள். அவை தென் ஆப்பிரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில். - படம்: இன்கோடாக்ஸ்

புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பங்ளாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்திய அரசிடமிருந்து இந்த அதிகாரபூர்வ அழைப்புக் கடிதம் கிடைத்துள்ளதாகப் பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஷாமா ஒபைத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அழைப்பு அந்நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் பங்ளாதேஷில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றிபெற்றது. அதன் பிறகு தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அதுவே அவரது முதல் இந்தியப் பயணமாக அமையும். மேலும், இந்தியப் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்திப்பதற்கான முதல் வாய்ப்பாகவும் இது அமையும்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிய உறவுச் சிக்கல்களுக்குப் பிறகு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனது வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ பங்ளாதேஷ் விரும்புவதாக அமைச்சர் ஒபைத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பங்ளாதேஷ்வெளியுறவு அமைச்சர்பிரதமர்நரேந்திர மோடி