லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் உள்ள காவல் நிலையத்தின் கூரைமீது எருமை மாடு ஒன்று ஏறி அங்கு பல மணி நேரம் இருந்ததால் பரபரப்பு நிலவியது.
இந்த வினோத சம்பவத்தைக் காட்டும் காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.
அந்தக் காவல் நிலைய கூரைமீது எருமை இருந்தது பற்றி காவல்துறையினருக்குத் தெரியவில்லை. அந்த விலங்கு அங்கு இருந்தது தெரியவந்ததும் அதைப் பார்க்க மக்கள் காவல் நிலையத்திற்கு வெளியே கூடினர்.
அப்போதுதான் எருமை மேலே இருந்தது பற்றித் தெரியவர, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
அந்த எருமையை மீட்க கையில் கம்புகளுடன் அதிகாரிகள் அணுகினர். இதனால் பதற்றமடைந்த எருமை, கூரையிலிருந்து கீழே குதித்தது. இதில் அதற்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
காவல் நிலைய கூரைமீது அந்த எருமை எவ்வாறு ஏறியது என்பது பற்றித் தெரியவில்லை.