தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலச்சரிவில் சிக்கிய பேருந்து; 15 பேர் பலி

1 mins read
3b1c9f18-d52c-4d1b-a9f9-ed701fa45548
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. - படம்: ஊடகம்

சிம்லா: நிலச்சரிவின்போது பேருந்தில் சென்று கொண்டிருந்த 15 பேர், அதில் சிக்கி உயிரிழந்த சோகச் சம்பவம் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அதில் சிக்கியது.

அதனால் பேருந்தில் இருந்தவர்களில் 15 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், பல பயணிகள் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மலைச்சரிவுகள் உள்ள பகுதி என்பதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளை மீட்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பிலாஸ்பூர் துணை ஆணையர் ராகுல் குமார் கூறுகையில், இதுவரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் பேருந்தில் 30க்கும் அதிகமானோர் இருந்ததாக தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்