தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதன்முறையாக ஊருக்குள் பேருந்து: மக்கள் நன்றி

1 mins read
f49f59ea-47b5-4e14-a0a9-afeb1164d728
முதன்முறையாக ஊருக்குள் வந்த பேருந்தை கிராம மக்கள் வரவேற்றனர். - படம்: ஊடகம்

சென்னை: இதுவரை பேருந்தே செல்லாத ஊருக்குள் முதல்முறையாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. அதனால் ஊர் மக்கள், அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே வண்ணாங்குளம் என்ற கிராமம் உள்ளது. கமுதிக்கு அருகில் உள்ளதால், அது கமுதி வட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதி இதுவரை இல்லை.

தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம், ஊரின் வழியாக கமுதி சென்று வர பேருந்து ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜகண்ணப்பன், கமுதிக்கு பேருந்து வசதிக்கான ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி மே 19ஆம் தேதி திங்கட்கிழமை காலை அந்த ஊருக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

பேருந்து வரும்போது விசிலடித்து, கைத்தட்டி, குலவை போட்டு பேருந்தை மக்கள் வரவேற்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்