பேருந்து - லாரி மோதல்; 6 பேர் உயிரிழப்பு

பேருந்து - லாரி மோதல்; 6 பேர் உயிரிழப்பு

1 mins read
1cba274a-6809-4d52-85c7-3f20089beff9
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷாகப்பூர் அருகே லாரியும் பயணிகள் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 17 பேர் பேர் படுகாயமடைந்தனர். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள கிவ்ராய் நகரிலிருந்து ஜல்னா நோக்கி வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்பேருந்தில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்பேருந்து ஷாகப்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது பழங்களை ஏற்றிவந்த லாரி, அதன்மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் அறுவர் உயிரிழந்தனர்.

மேலும், காவல்துறையினரும் அக்கம்பக்கத்தினரும்விரைந்து செயல்பட்டு பேருந்தின் சன்னலை உடைத்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

இவ்விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்