அமராவதி: ஆந்திர தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
அவர் தனது நிறுவனத்தின் 60 விழுக்காடு பங்குகளை விற்றதன் மூலம் ரூ.7,000 கோடி பெற்றதாகவும் இதற்காகத் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் தங்கக் காணிக்கை அளிப்பதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தனது பெயரை வெளியிட வேண்டாம் என அத்தொழிலதிபர் கேட்டுக்கொண்டதாக முதல்வர் சந்திரபாபு கூறினார்.
திருப்பதி கோவிலில் ஏழுமலையான் சிலைக்குத் தினமும் 120 கிலோ தங்க நகைகளை அணிவித்து அலங்காரம் செய்யப்படும்.
இதையறிந்த தொழிலதிபர் 121 கிலோ தங்க நகைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளார் என்றும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.140 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.