புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.3,984.86 கோடி செலவிலான இத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் அடுத்த தலைமுறை உந்துகணையை உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும் அதிகபட்சமாக 1,000 டன் எடையும் கொண்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை உந்துகணைகளை விண்ணில் செலுத்த முடியாது. எனவே மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.