இரண்டு தலைகளுடைய கன்றைப் பசு ஒன்று ஈன்றெடுத்துள்ள அதிசயம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
மங்களூரின் கின்னிகோலி பகுதியில் இந்த விசித்திரக் கன்று பிறந்துள்ளது.
ஜெயராம ஜோகி என்பவருக்குச் சொந்தமான அந்த பசு, ஒரு உடலில் இணைக்கப்பட்ட இரு தலைகளுடைய கன்றை ஒரு செவ்வாய்க்கிழமையன்று ஈன்றெடுத்தது.
கன்றுக்கு மொத்தம் நான்கு கண்கள் உள்ளன.
ஆனால், நடுவில் உள்ள கண்கள் இயங்கவில்லை. எஞ்சிய இரு கண்களும் சரியாக இயங்குகின்றன என்று அறிக்கைகள் சில குறிப்பிட்டுள்ளன.
தற்போது கன்றால் சுயமாக நிற்க முடியவில்லை. அதனால், குழந்தைகளுக்கு உணவு தருவது போல் அந்தக் கன்றுக்குத் தீனி தரப்படுகிறது.
தலையின் எடை அதிகம் என்பதாலும் உடலைவிட கூடுதல் கனம் என்பதாலும் கன்றால் நிற்க முடியவில்லை.
பசுவுக்கு இரண்டாவதாகப் பிறந்த இந்த கன்று, ஒரு பெண்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கன்றின் ஆரோக்கியம் குறித்து குடும்பத்தார் அனைவரும் கவலைப்படுவதாக ‘லோக்கல்18’ செய்தி நிறுவனம் அறிந்து வந்தது.
கால்நடை மருத்துவர் ஒருவர் கன்றைச் சோதித்துப் பார்த்துவிட்டு, அது இப்போதைக்கு ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், இந்நிலை மாறலாம் என்று கூறப்பட்டது. கன்று எந்த அளவுக்குச் சரியாகப் பராமரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் ஆயுள்காலம் அமைந்திடும்.
இதற்கிடையே, உள்ளூர்வாசிகளின் கவனத்தை இந்தக் கன்று பெரிதும் ஈர்த்துவருகிறது.