ஹைதராபாத்: இந்தியாவின் ஹைதராபாத் நகரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) ஹோலி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தூல்பேட்டை மல்சா புரம் என்னும் இடத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் குல்ஃபி ஐஸ்கிரீம்கள், பர்பிக்கள், இனிப்பு உருண்டைகள் விநியோகம் செய்யப்பட்டன.
இதில் கஞ்சா கலந்திருப்பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசியமாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு விழா ஏற்பாடு செய்த சத்யநாராயண சிங் என்பவரை கைது செய்து விசாரித்தனர். கஞ்சா கலந்திருந்த உணவுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னணியில் இருப்பது யார், கஞ்சா எங்கிருந்து வந்தது என காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.