கேரள கோவில் வளாகத்தில் கஞ்சா செடி: தீவிர விசாரணை

கேரள கோவில் வளாகத்தில் கஞ்சா செடி: தீவிர விசாரணை

1 mins read
154adfd6-88a7-42e4-ad2f-347f0eda81cf
போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அம்மாநில அரசு ‘ஆபரேஷன் தண்டர்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கோவில் வளாகத்தில் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கேரளாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

இதையடுத்து, போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அம்மாநில அரசு ‘ஆபரேஷன் தண்டர்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை மேண்டுள்ளது.

இந்நிலையில், வாகத்​தானம் மணி​கண்​டபுரம் கோவில் வளாகத்தில் உள்ள மூடிய வழிப்​பாதை​யின் அருகே இரண்டு கஞ்சா செடிகள் வளர்ந்​திருப்​பது குறித்து அக்கோவில் ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த அரசு அதிகாரிகள், கஞ்சா செடிகள் என்பதை உறுதிசெய்த பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

கடந்த மே மாதம் திருவிழா நடைபெற்ற வேளையில் கோவிலுக்கு வந்த யாரோ கஞ்சா புகைத்த பிறகு எஞ்சிய கஞ்சாவை வீசிச்சென்றதில் இரு செடிகள் வளர்ந்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவைப் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு என அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்