கண்ணை மறைத்த உறைபனியால் கால்வாய்க்குள் விழுந்த கார்: 10 பேர் கதி என்ன

கண்ணை மறைத்த உறைபனியால் கால்வாய்க்குள் விழுந்த கார்: 10 பேர் கதி என்ன

1 mins read
0dbf115e-8a95-4402-ba69-a404537263ba
12 பேர் பயணம் செய்ததில் இருவர் மட்டுமே உயிர்தப்பினர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தில் கும்மிருட்டும் அடர்ந்த பனியும் சேர்ந்து கண்ணை மறைத்ததால் சொகுசு கார் ஒன்று பள்ளத்திற்குள் விழுந்தது.

அப்போது அந்த காரில் இருந்த 12 பேரில் இருவர் மட்டும் தப்பி உள்ளனர். மற்ற 10 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

ஹரியானாவின் ஃபதேபாத் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) இரவு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பக்ரா கால்வாயில் விழுந்த காரையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

மீட்புப் பணிகளின்போது 10 வயது சிறுவன் காப்பாற்றப்பட்டான். அப்போது 55 வயது ஆடவரின் சடலம் மீட்புக்குழுவிடம் சிக்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஹரியானா திரும்பியபோது இரவு 10 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சர்தார்வாலா என்னும் கிராமம் அருகே உள்ள பாலம் ஒன்றைக் கடக்க முயன்றபோது கால்வாய்க்குள் கார் விழுந்தது.

இருள் சூழ்ந்த நிலையில் கடும் பனியும் கண்ணை மறைத்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கால்வாய்க்குள் கார் பாய்வதற்கு முன்னதாக, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார். ஜர்னைல் சிங் என்று அடையாளம் காணப்பட்ட அந்த ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்