தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஜிஎஸ்டி’ குறைப்பால் கார் வர்த்தகத்தில் எழுச்சி: ஒரே நாளில் 30,000 கார்களை விற்ற மாருதி நிறுவனம்

2 mins read
8072fca1-1733-46b5-a8e0-3567680d434e
மாருதி கார் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதற்காகத் தயார்நிலையில் இருக்கும் கார்கள். - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலான முதல் நாளில் 30,000 கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

அதே நாளில், ஹூண்டாய் நிறுவனமும் 11,000 கார்களை விற்பனை செய்துள்ளது.

குளிரூட்டி, தொலைக்காட்சி போன்ற மின்சாதனங்களும் அதிக அளவு விற்பனையாகி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செப்டம்பர் 22ஆம் தேதி ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்தது. இதனால் கார்களுக்கான வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைந்தது.

இதையடுத்து, கார்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் முண்டி அடித்துக்கொண்டு அவற்றை முன்பதிவு செய்தனர்.

பண்டிகைக் காலங்களில் மக்கள் புதிய கார்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். இத்துடன், ஜிஎஸ்டி குறைப்பும் சேர்ந்துள்ளதால் கார் விற்பனை சராசரியைவிட 5 முதல் 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாருதி, சுசுகி நிறுவனச் சந்தை, விற்பனைப் பிரிவு அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறும்போது, ‘‘கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கார் வாங்குவது பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தனர். ஏற்கெனவே 25,000 கார்கள் விற்கப்பட்ட நிலையில், ஒருநாள் விற்பனை மட்டும் 30,000ஐ எட்டியது. இதுவரை 75,000 பேர் கார்கள் வாங்க முன்பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்தைவிட 50 விழுக்காடு அதிகமாகும்,” என்றார்.

பெரும்பாலான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி ஐந்து விழுக்காடாகக் குறைந்ததால், ஏராளமான பொருள்களின் விலைகள் மாற்றியமைக் கப்பட்டன.

இந்துஸ்தான் லீவர் உட்பட முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்தன. பண்டிகைக் காலத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் விற்பனையும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்