சீனாவுடன் பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்ததாக இந்திய ராணுவ அதிகாரி மனைவி மீது வழக்கு

சீனாவுடன் பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்ந்ததாக இந்திய ராணுவ அதிகாரி மனைவி மீது வழக்கு

கோப்புப் படம்: அருணாச்சல்24

19 Oct 2026 - 7:00 pm

1 mins read

ஜம்மு: இந்திய ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர், கல்வித்துறை ஆய்வாளர்கள் போல் நடித்த சீன உளவாளிகளுக்கு நாட்டின் பாதுகாப்பு குறித்த உணர்வுபூர்வமான தகவல்களைப் பகிர்ந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காந்தி நகர் காவல்நிலையத்தில் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்த அவர், உயர்கல்வி கற்ற ஓர் ஆராய்ச்சி எழுத்தாளர் ஆவார். 2023ல் ஐக்கிய நாட்டுச் சபையில் பணிபுரிந்தபோது சில வெளிநாட்டினருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஆய்வாளர்கள் மின்னிலக்க உள்ளடக்கப் படைப்பாளர்கள் (உருவாக்குநர்கள்) என்ற போர்வையில் அவரை அணுகிய சீன உளவு அமைப்பின் உளவாளிகள் சிலர், பாதுகாப்பு, எல்லைப் பகுதிகள், சுற்றுச்சூழல், புவிசார் அரசியல் குறித்து கட்டுரைகள் எழுதுமாறு தூண்டியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வைத்து அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதி தொடர்பான விவரங்கள், அருணாச்சலப் பிரதேசத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கியமான கோப்புகள் அந்தக் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

தானாகத் தகவல்களைப் பகிர்ந்தாரா அல்லது சீன உளவாளிகளின் சதித்திட்டத்தில் ஏமாந்தாரா என்பதை அறிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ராணுவம்அதிகாரிமனைவிசீனாஉளவாளிஅருணாச்சலப் பிரதேசம்விசாரணை