முன்னாள் தமிழக அமைச்சர் சேகர் பாபுமீது வழக்குப் பதிவு

முன்னாள் தமிழக அமைச்சர் சேகர் பாபுமீது வழக்குப் பதிவு

1 mins read
5c52f8f2-b522-4894-a894-ff632b70ff1d
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு. - படம்: தி இந்து

சென்னை: சென்னை மாநகரக் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுமீது நான்கு பிரிவுகளின்கீழ் வெள்ளிக்கிழமை (மே 22) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தரப்பினருக்கும் தவெக வேட்பாளர் அசோக் சினோரா தரப்பினருக்கும் இடையே வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.

அப்போது, அசோக் சினோராவையும் வழக்கறிஞர் விஜய்குமாரையும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தாக்கியதாகச் சென்னை வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில், சேகர் பாபுமீது 4 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் அசோக் சினோராவை 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் சேகர் பாபு தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்