கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷுக்குச் சொந்தமான வீட்டிலும் அலுவலகங்களிலும் சிபிஐ அதிரடிச் சோதனை நடத்தி வருகிறது.
இம்மாதம் 9ஆம் தேதி இரவு பணிக்குச் சென்ற பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்து சஞ்சய் ராய் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவச் சங்கங்கள் சார்பில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இதுதொடர்பான வழக்கு ஒன்று கோல்கத்தா உயா் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் மருத்துவா் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, பெண் மருத்துவா் படித்து வந்த மருத்துவக் கல்லூரி முதல்வா் சந்தீப் கோஷ் தமது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து சந்தீப் கோஷ் மற்றும் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் மீது ஊழல் புகார் எழுந்தது தொடா்பாக சிபிஐ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனா். இந்நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி அதிகாலையில் சந்தீப் கோஷூக்குச் சொந்தமான வீடு, குடியிருப்பு என மொத்தம் 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினா்.
இந்த சோதனைக்காக பலத்த காவல்துறைப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2021ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆர்.ஜி.கா். மருத்துவமனையில் நடைபெற்ற கட்டுமானம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளில் ஊழல் இருந்ததாக முன்னாள் முதல்வா் மீது புகார் எழுந்தது. அந்த புகாரின்போில் சோதனை நடத்தப்படுவதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.
இந்தச் சோதனையின்வழி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.