நான்காண்டு தாமதத்திற்குப் பின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

நான்காண்டு தாமதத்திற்குப் பின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

1 mins read
aa4bf352-8ecd-4adf-aa85-d0c12c5c98b3
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தள்ளிப்போனது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நான்காண்டு தாமதத்திற்குப் பின் அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல் ஒன்று கூறுகிறது.

இந்தியாவில் பத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில், முதல் கணக்கெடுப்பு 1872ம் ஆண்டு தொடங்கியது.

சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் நடத்தப்படுகிறது.

இதுவரை 15 முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளன.

16வது கணக்கெடுப்பு கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கொவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாகக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசாங்கம் முடிவெடுத்து உள்ளதாகத் தெரிகிறது. ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு அந்தப் பணி நீடிக்கும்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைமுறை குறித்து அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பு நடத்தும்போது பொதுமக்களிடம் கேட்பதற்கு என 31 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளன.

இந்தக் கணக்கெடுப்பில், சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்