ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க மத்திய வங்கி நடவடிக்கை

ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க மத்திய வங்கி நடவடிக்கை

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

11 Oct 2026 - 6:24 pm

1 mins read

புதுடெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு, ஒரு டாலருக்கு 97 ரூபாய் என்ற நிலையில் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவற்காக இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையை நேரடியாகப் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்கி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டாலர்களை நேரடியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து குறிப்பிட்ட வங்கிகள்மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது பொதுச் சந்தையில் டாலருக்கான தேவையைக் குறைத்து, ரூபாய் மதிப்பின் சரிவை உடனடியாகத் தடுக்க உதவும்.

ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள அதிக அளவிலான அமெரிக்க டாலர்களை பொதுச் சந்தையில் விற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான அன்னியச் செலாவணி கட்டுப்பாடு விதிமுறையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. முறையான வணிக ஆதாரங்களின்றி செய்யப்படும் ‘டெரிவேட்டிவ்’ பரிவர்த்தனை உச்சவரம்பு US$100 மில்லியனிலிருந்து US$5 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் மாறிவரும் சூழலுக்கு மத்தியில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறிய இந்திய ரிசர்வ் வங்கி, சந்தையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றது.

தற்போதை நடவடிக்கைளால் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் ரூபாயின் சரிவைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ரூபாய்மதிப்புநாணயம்மத்திய வங்கி