லாட்டரி சீட்டு விற்பனைக்கு மத்திய அரசு வரிவிதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

1 mins read
1b128e87-31b7-47b3-9af2-970bde7b4653
லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்களுக்கு விற்பனை வரி உரிமை மத்திய அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: லாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்குச் சேவை வரி விதிக்க மத்திய அரசுக்கு உரிமையுள்ளது என்று 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, என்.கே. சிங் ஆகியோருள்ள அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் எந்தவித முகர்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. அவ்வாறு இருக்க, அவர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லையென நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனினும், அரசியல் சாசனத்தின் பட்டியல் 2ல் வகைப்படுத்தப்பட்டபடி மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை அவர்கள் செலுத்துவது தொடரும் என்றனர்.

லாட்டரி சீட்டுகள் விற்பனையாளர்களுக்கும் அவற்றை வாங்குபவர்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு சேவை வரி விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

லாட்டரி சீட்டுகள்மீது மாநில அரசு மட்டுமே வரிவிதிக்க முடியும் என்றும் மத்திய அரசால் சேவை வரி விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்