மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசின் முக்கியச் சந்திப்புகள்

1 mins read
7046294a-e22c-4b4a-adc9-055805de9027
மணிப்பூரில் நடந்த கலவரத்தை நிறுத்துமாறு குரல் கொடுதற்குப் பலர் சென்ற மாதம் பேரணி நடத்தினர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இம்ஃபால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் இன அடிப்படையிலான வன்முறை குறித்துக் கலந்துபேச மத்திய அரசாங்கம் முக்கியமான சந்திப்புகளை நடத்தியது என்று அம்மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) தெரிவித்தார்.

சந்திப்புகள் குறித்த மேல்விவரங்களை திரு சிங் வெளியிடவில்லை.

கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைக்க சம்பந்தப்பட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். கூட்டு முயற்சியால் மணிப்பூரில் அமைதி திரும்பியுள்ளதாகவும் திரு சிங் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்த்தி, குக்கி மக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல்களில் 200க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்