மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

1 mins read
1fd0fb0c-e639-4ee6-8e21-3e8241b45293
திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். - கோப்புப் படம்: என்டிடிவி

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது.

திங்கட்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அவையைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு கூட்டிய கூட்டத்தில் ஆலோசனைகளுக்கு இடையே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.

அதிருப்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்களுக்கு தனி இருக்கை ஒதுக்கியதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பின்னர் மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டன. இந்தக் கூட்டத்தில் அரசின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திங்கட்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா போன்றவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்