நிலவில் 250க்கும் மேற்பட்ட அதிர்வுகள் சந்திரயான் 3 பதிவு

1 mins read
07f68939-1720-49b0-87e2-689adafc21f3
இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம். - படம்: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்

பெங்களூரு: நிலவில் ஏற்பட்ட 250க்கும் மேற்பட்ட அதிர்வுகளை இந்திய விண்கலம் சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற அதிர்வுகளை அது பதிவு செய்திருப்பது இதுவே முதல்முறை.

பதிவு செய்யப்பட்ட அதிர்வுகளில் 50 மிகத் தெளிவாகப் பதிவாகின.

சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவரின் நடமாட்டத்துக்கும் இந்த அதிர்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

நிலவின் தென்துருவப் பகுதியில் அதிர்வுகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.

குறிப்புச் சொற்கள்
நிலாசந்திரயான்நில அதிர்வு