77 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார வசதி பெற்ற கிராமம்

77 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார வசதி பெற்ற கிராமம்

1 mins read
956764a4-4258-4cc4-a8ae-7654540b5b90
டிம்னார் கிராமத்தில் மொத்தம் 53 வீடுகள் மட்டுமே உள்ளன. - படம்: ஊடகம்

ராய்பூர்: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக ஒரு கிராமம் மின்சார வசதி பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள டிம்னார் என்ற அந்த கிராமம், நீண்ட காலமாக நக்சலைட் இயக்கத்தின் பிடியில் இருந்து வந்தது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் அண்மைக் காலமாக நக்சல் இயக்கத்தினருக்கு எதிராக அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடப்பாண்டில் மட்டும் 113 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக, அம்மாநிலம் முழுவதும் நக்சல்கள் இயக்கத்தின் பிடி தளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடப்பாண்டில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் 93 பேர் பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில்தான் டிம்னார் கிராமம் உள்ளது. நக்சல் ஆதிக்கம் குறைந்ததால் இக்கிராம மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்கு பின்னரே இந்தக் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. இங்கு மொத்தம் 53 வீடுகள் மட்டுமே உள்ளன.

கடந்த 2018 ஏப்ரல் 28ஆம் தேதி, “நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்னிணைப்பு பெற்றுவிட்டன. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்,” என்று பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்