சென்னை விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வந்துசேரவும்: பயணிகளுக்கு அறிவுரை

சென்னை விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வந்துசேரவும்: பயணிகளுக்கு அறிவுரை

1 mins read
46e9e685-1342-4374-afc1-238c69ae34a9
சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று புறப்படும் வேளையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகள் அதைக் கண்காணிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி -

விமானம் புறப்படுவதற்கு முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்துசேரும்படி சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வந்துசேருவதன் மூலம் பயண நடைமுறைகளைப் பதற்றமின்றி நிதானமாக நிறைவேற்ற முடியும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த இரு வாரங்களாக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திலும் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திலும் நிலவிய கூட்ட நெரிசலைக் காட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.

நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி விமான நிறுவனங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் அதிகாரிகள் பணித்துள்ளனர்.