சென்னை விமானம் அவசரத் தரையிறக்கம்

1 mins read
27b8905b-a41a-475a-b74e-5a636d814ca3
கோளாறு ஏற்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் அவ்விமான நிலையத்திற்கே திரும்பியது.

டெல்லியில் இருந்து கிளம்பிய 6E-2789 என்ற அவ்விமானம் ஒரு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் அங்கேயே தரையிறங்கியது.

நேற்று சனிக்கிழமை (ஜூன் 10) இரவு இந்நிகழ்வு இடம்பெற்றது.

அவ்விமானத்தில் 230க்கும் மேற்பட்டோர் இருந்ததாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டபின் அவ்விமானத்தில் தேவையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் குறிப்பிட்டது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.