சென்னை மெட்ரோ திட்டம்: 3வது பணிமனைக்கு 30 ஏக்கர் நிலம்

சென்னை மெட்ரோ திட்டம்: 3வது பணிமனைக்கு 30 ஏக்கர் நிலம்

1 mins read
35d0176c-9e0c-4271-a450-67bbb4c6d372
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சோழிங்கநல்லுார்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிறுசேரி இடையே 30 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது.

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மூன்று வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன.

இப்பணிகள் அனைத்தும் வரும் 2028ல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதுபோல, 3வது பணிமனை சோழிங்கநல்லூர் - சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

“இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில்களை பராமரித்து இயக்கும் வகையில் மூன்று இடங்களில் பணிமனை அமைக்க உள்ளோம். மாதவரத்தில் 48.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.284.51 கோடியிலும், பூந்தமல்லியில் 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.187.5 கோடி மதிப்பிலும் பணிமனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன,” இது குறித்து விளக்கமளித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

“சோழிங்க நல்லுார் - சிறுசேரி இடையே 3வது பணிமனை அமைக்க செம்மஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 25 முதல் 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய இருக்கிறோம். இதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம்,” என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்