தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெருநாய்களைக் காப்பகங்களுக்கு மாற்றுவதை எதிர்க்கும் ஆர்ப்பாட்டம்

1 mins read
1cc7ebb9-502b-43cb-9cd5-52f7fc07024b
பிடிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருக்களில் விடக் கூடாது என்றும் நீதிமன்றம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது.  - படம்: ஏஎஃப்பி

சென்னை: டெல்லி நகரிலுள்ள தெருநாய்களைக் காப்பகங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சென்னையில்  விலங்கு நல ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் முன்னனுமதி இல்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்காக  டெல்லி காவல்துறையினர், நான்கு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறையினர் அகற்ற முயன்ற போது சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் கடுமையாக நடத்தியதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவுகிறது.

பெண் காவல்துறை அதிகாரியும் பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரும் பேருந்திற்குள் கைகலப்பில் ஈடுபடுவதை மற்றொரு காணொளி காண்பிக்கிறது.

டெல்லி, நொய்டா, காஷியாபாத், குருகிராம் மற்றும் பாரிடாபாத் பகுதிகளில் தெருநாய்கள் இல்லாத நிலைமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், பிடிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருக்களில் விடக் கூடாது என்றும் நீதிமன்றம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவைப் பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாகவும் மிகச் சிறுபான்மையினரே உரத்த குரலில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் டெல்லி அரசாங்கத்தைப் பிரதிநிதித்த தலைமைச்சட்ட அதிகாரி துஷர் மேத்தா தெரிவித்தார்.

நாய்க்கடியால் பரவும் நோய்களால் சிறார்கள் மடிவதாகக் குறிப்பிட்ட திரு துஷார் மேத்தா, நாய்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகள் இத்தகைய நோய்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்